தினகரன் கட்சிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம்

ராயப்பேட்டையில்  உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில்  உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக கூட்டம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில்  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசும் போது சோதனைகளை தாங்கி அதிமுகவை காப்பாற்றியவர் ஜெயலலிதா. தற்போது   தொண்டர்களால் அதிமுக வழிநடத்தப்படுகிறது. அ. தி.மு.கவில் சசிகலா உறுப்பினர் கிடையாது. அதிமுகவில் நடப்பாண்டில் 60 லட்சம் புதிய உறுப்பினர்கள் உள்ளனர் என கூறினார்.
இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசும் போது  துன்பத்தையும், இடர்பாடுகளையும் தாங்கி கொண்டு அதிமுகவை கட்டி காப்பாற்றியவர் ஜெயலலிதா. வெளிநாடுகளிலும் அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா.சதிகாரர்களின் திட்டங்களை முறியடித்து ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை தன்னை அர்ப்பணித்து காத்தவர் ஜெயலலிதா என கூறினார்
பின்னர்  பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.  தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என கூறினார்.

You might also like More from author