சுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்

சில பண்டங்களின் மணத்தைப் பார்க்கும்போதே பசியைத் தூண்டும் வகையிலும் சுவைத்தால், மீண்டும் சுவைக்கும் ஏக்கத்தை வளர்ப்பதாகவும் பலநாட்கள் அந்த மணம், குணம், சுவையை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கும். நம் வீடுகளில் தயாரிக்கப்படுபவை நம் மண்ணின் வாசனையுடன் உருவானவை இதைச் சாப்பிடுபவருக்கும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காதபடியும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்படியும் உள்ள பண்டங்களில் ஒன்று தான் சீடை.

இத்தகைய சிறப்புடைய சீடையை இப்போழுது எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போமா!!!!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப் (பொடித்தது)
பொட்டுக் கடலை – கால் கப்
தேங்காய் – 1 மூடி.
எண்ணை – தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை நீரை வடித்து விட்டு ஈர அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும்.

பொட்டுக் கடலையை மிக்சியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி பாகு  காய்ச்சி வைக்கவும்.

பாகில் ஈர அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டுக் கிளறவும். அதனுடன் பொட்டுக் கடலை மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணை ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை கடாய் முழுவதும் பரப்பி இருக்குமாறு போட்டு பொன்னிறம் வருமாறு பொரித்து எடுக்கவும். சுவையான இனிப்பு சீடை தயார்

You might also like More from author