12 மருந்துகள் உடனடியாக தடை-மத்திய அரசு அதிரடி!!

12 பூச்சி கொல்லி மருந்துகளை உடனடியாக தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் 6 மருந்துகள் 2020 டிசம்பர் முதல் தடை விதிப்பதாகவும் கூறியுள்ளது.

66 பூச்சிகொல்லி மருந்துகள் பயன்பாடு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசு கடந்த 2013ல் குழு ஒன்றை அமைத்தது. இந்த 66 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. மத்திய அரசு அமைத்த குழு, 2 வருடங்களுக்கு முன்னர், 18 மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், 12 பூச்சி கொல்லி மருந்துகள் ஆகஸ்ட் 8 முதல் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த மருந்துகளை இறக்குமதி செய்பவர்கள், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. 6 பூச்சி கொல்லி மருந்துகள் 2020 டிசம்பர் முதல் தடை விதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்துகள்:

பெனோமில், கார்பரில், டியாஜினோன், பெனாரிமோல், பென்தியோன், லினுரோன், மெதோக்சி, எதில் மெர்குரி குளோரைடு, மெதில் பராதியோன், சோடியம் சியானிட், தியோமெடோன், திரிமோர்ப், அலக்ளோர், திகுளோர்வோஸ்,போரேட், பாஸ்பாமிதோன், திரியஜோபோஸ், திரிகுளோர்போன்

You might also like More from author