மேகதாது விவகாரம் : மாலை கூடுகிறது சிறப்பு தமிழக சட்டசபை

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக இன்று(டி.,06) மாலை 4 மணிக்கு தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. இந்நிலையில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிரானவும், அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம் கூட உள்ளது.

அனுமதியை திரும்பப் பெறுமாறு மத்திய நீர்வள அமைச்சகம் உத்தரவிடவும் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது. காவிரி படுகையில் மேகதாது உள்ளிட்ட எந்த இடத்திலும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேகதாது விவகாரம் தொடர்பாக, அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் பழனிசாமி கொண்டு வர உள்ளார். இதனை அவை முன்னவரான ஓபிஎஸ் முன்மொழிய உள்ளார்.

You might also like More from author