சிவகங்கை அருகே இரு கிராமத்தினரிடையே மோதல் : இருவர் பலி!

மானாமதுரை அருகே இரு கிராமத்தினரிடையே மோதலில் இருவர் கொல்லப்பட்டனர். மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு, கச்சநத்தம் கிராமங்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கச்சநத்தம் கிராம இளைஞர்கள் டூவிலரில் சென்ற போது, ஆவரங்காடு கிராமத்தின் சிலர் தாக்கியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து கத்தி உட்பட ஆயுதங்களுடன் ஆவரங்காடு கிராமத்தினர், கச்சநத்தம் கிராமத்திற்கு சென்று தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களை கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சுரேஷ், சந்திரசேகர், மருது, மலைச்சாமி, சுகுமாறன், தனசேகரன்,ஆறுமுகம், சண்முகநாதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

 இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகம், சண்முகநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like More from author