மீன் கட்லெட் – குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

உடலுக்கு தேவையான ஒமேகா-3, மீனில் அதிகமாக இருக்கிறது. அதிலும் மீனை குழம்பில் போடும் போது, ப்ரை செய்து சாப்பிடும் போது அதன் சுவை அருமையாக இருக்கும். அவற்றில் சற்று வித்தியாசமாக அவற்றை கட்லெட் போல் ஈவினிங்கில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், மீன் பிடிக்காத குழந்தைகளும் அவற்றை சுவைத்து சாப்பிடுவர். அத்தகைய மீன் கட்லெட்டை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

முள் இல்லாத மீன் – 200 கிராம்,

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1,

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2,

மிளகாய்த்தூள் – தேவையான அளவு,

கரம்மசாலாத்தூள் – தேவையான அளவு,

மிளகுத்தூள் – தலா 1/2 டீஸ்பூன்,

முட்டை – 2,

பிரெட் தூள் – தேவையான அளவு,

எண்ணெய் – தேவையான அளவு,

உப்பு – தேவையான அளவு .

செய்முறை :

மீனை ஆவியில் வேகவைத்து எடுத்து உதிர்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை வதக்கி, மீன், மசாலாத்தூள், உப்பு சேர்த்து 15 நிமிடம் வதக்கி இறக்கவும். ஆறியதும் உருளைக்கிழங்கு சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி கட்லெட்டாக தட்டி முட்டை கலவையில் தோய்த்து, பிரெட் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.

You might also like More from author