கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம்

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்தபோது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.
இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நிறுவனத்தின் ரூ.1.16 கோடி மதிப்பிலான முதலீடு மற்றும் வங்கி இருப்பை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு தற்காலிகமாக முடக்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது. கொடைக்கானல் மற்றும்  ஊட்டியில் அவருக்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்பிலான  சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

You might also like More from author