தங்கம் விலை தொடர்ந்து உயர்வு !!!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.344 அதிகரித்துள்ளது. தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதிலிருந்து தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற நிலை காணப்படுகிறது.
 சென்னை சந்தை நிலவரப்படி இன்று 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 2,651க்கும், சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.21,208க்கும், 24 காரட் 10கிராம் தங்கம் விலை ரூ.460 அதிகரித்து ரூ.28,350க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையிலும் ஏற்றம் காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 காசுகள் அதிகரித்து ரூ.47.80க்கும், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,165 அதிகரித்து ரூ.44,640க்கும் விற்பனையாகிறது.

You might also like More from author