கூகுள் மேப்பில் புதிய அம்சம் அறிமுகம்

ரியல் டைம் லொகேஷன் ஷேரிங் வசதியில் புதிதாக பேட்டரி சார்ஜ் அளவைக் காட்டும் அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது. 

கூகுள் மேப் அப்ளிகேஷனின் சமீபத்திய அப்டேட் மூலம் நேரிடப்பகிர்வு (Sharing Real Time Location) என்ற புதிய வசதி இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகமாகமானது. நாம் எங்கிருக்கிறோம். எங்கெல்லாம் செல்கிறோம் என்பதை நாம் விரும்பும் நபர்களுடன் பகிரும் வசதியை இது அளிக்கிறது.

இதில் புதிய அம்சமாக இருப்பிடத் தகவலைப் பகிரும் நபரின் இடத்தை அறிவதுடன் அவரது மொபைல் பேட்டரியில் சார்ஜ் அளவையும் தெரிந்துகொள்ளும் வசதியும் அறிமுகமாகியுள்ளது.

உதாரணத்திற்கு, ஒருவர் இப்போது கோவிலில் இருக்கிறார் என்று கொள்வோம். அவர் கோயிலில் இருந்து அருகில் உள்ள பூங்காவுக்குச் செல்கிறார். பின், அங்கிருந்து உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு தன் வீடுக்குச் செல்கிறார். அவர் கோயிலில் இருக்கும்போது தன் நண்பர் ஒருவரிடம் (அவரும் கூகுள் மேப் பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்) கூகுள் மேப் நேரிடப்பகிர்வு மூலம் தன் இருப்பிடத்தை பகிர்ந்துள்ளார் என்று கொண்டால், அவர் கோவிலில் இருந்து வீடுக்குச் சென்றடையும் வரை அவர் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை அவரது நண்பர் தனது கூகுள் மேப் அப்ளிகேஷனில் அறிய முடியும்.

இனி எப்படி, நேரிடப்பகிர்வு செய்வது எப்படி என்று பார்க்கலாம். கூகுள் மேப் அப்ளிகேஷனில் நுழைந்ததும் அதன் ஆப்ஷன்கள் மெனுவில் ‘Share Location’ என்பதை தேர்வு செய்யவும். பின், ‘Get Started’ என்பதை அழுத்த வேண்டும்.

இப்போது, எவ்வளவு நேரத்திற்கு உங்கள் இடத்தை பகிர வேண்டும் என்பதை நிர்ணயிக்கலாம். இல்லாவிட்டால், ‘Unti you turn this off’ என்பதை தேர்வு செய்யலாம்.

பின் யாருடன் எல்லாம் பகிர வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். ‘Select People’ என்பதை தேர்வு செய்தால் தோன்றும் பட்டியலில் நீங்கள் விரும்பும் நபர்/நபர்களை தேர்வுசெய்ய வேண்டும்.

இவ்வளவுதான். இனிமேல் நீங்கள் தேர்வு செய்த நபர்/நபர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதை அறிய முடியும்.

You might also like More from author