கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு

உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கூகுள் தேடல் மட்டுமல்லாது, பல்வேறு வகையான வசதிகளையும் நிர்வகித்து வரும் கூகுள், தனது சமூக வலைதளமான கூகுள் ப்ளஸை மூடுவதாக நேற்று அறிவித்தது.
முன்னதாக கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் நேற்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் பிளஸ் சமூகவலைத்தளம் நிரந்தரமாக மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது

You might also like More from author