1199 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிக்கையை டின்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. 

இந்த தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு செப்டம்பர் 11-ம் தேதி கடைசி நாள் ஆகும். நவம்பர் 11-ம் தேர்வு நடைபெறும்.

பிற தகவல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்துகொள்ளலாம்.

You might also like More from author