கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் 50-வது பட மகிழ்ச்சில் ஹன்சிகா

ஹன்சிகா  50-வது படமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் மகா என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.சினிமா குறித்து ஹன்சிகா பேட்டி ஒன்றில் கூறியதாவது:- ’50-வது படத்தில் நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். மகா ஹீரோயினை சுற்றி நகரும் கதை கொண்ட படம். முதல்முறையாக இது போன்ற படத்தில் நடிக்கிறேன்.

நான் வெற்றிகரமான நடிகையாவேன் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஏன் என்றால் நான் கடினமாக உழைக்கிறேன். அதனால் தான் என்னை தேடி நல்ல நல்ல படங்கள் வருகின்றது. நான் பெரிய படங்களில் நடிப்பேன் என்று தெரியும். எ
ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் புதிதாக ஏதாவது கற்கிறேன். நிறைய நல்லவர்களை சந்தித்துள்ளேன். பல மேதைகளை சந்தித்து பேசியுள்ளேன். தவறுகள் செய்வது இயற்கை. ஆனால் தவறு செய்துவிட்டோமே என்று இடிந்து போகும் ஆள் இல்லை நான்.
முன்பெல்லாம் நான் ஆண்டுக்கு 8 படம் பண்ணினேன். தற்போது ஆண்டுக்கு 4 படங்கள் செய்கிறேன். ஓவியம் வரைவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் வரைகிறேன்’ என்று கூறி இருக்கிறார் ஹன்சிகா.

You might also like More from author