அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை சந்தித்தார்- தினகரன் பரபரப்பு பேட்டி

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை தனியாக சந்தித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அகற்றிவிட்டு தன்னை முதல்வராக்க ஆதரவு கொடுத்ததாகவும் டிடிவி தினகரன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

டிடிவி தினகரனை சந்தித்ததை ஓ.பன்னீர்செல்வமும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், ‘முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன் என்னிடம் தினகரன் பேசினார். அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதற்கு பின்னர்தான், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன’ என ஓபிஎஸ் விளக்கம் அளித்தார்.

தினகரன் இன்று திருச்சியில் பேட்டி அளித்த அவர், ‘ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நடைபயிற்சியின்போது என்னை சந்தித்து பேசினார்’ என்றார்.

You might also like More from author