நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தி வரும் 90 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை அங்கீகரித்து விருதுகள் வழங்கி டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு நோய் சிறப்பு மையம் பெருமிதம்

சென்னைசெப்டம்பர் 21,2018 : நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தி வரும் 90 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களை ஊக்குவித்து கொண்டாடும் முயற்சியில் ‘நீரிழிவின் மீது வெற்றி விருது’ என்ற இதன் வகையில் முதல்முறையாக வழங்கப்படும் விருதுவை டாக்டர். மோகன்ஸ் டயாபட்டிஸ் ஸ்பெஷாலிட்டிஸ் சென்டர் (DMDEC) வெள்ளிக்கிழமையன்று தொடங்கி வைத்துள்ளது.

 

நீரிழிவு நோயுடன் பல தசாம்ச ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்தி வந்துள்ள நிலையில், இந்த விருதுகள் நீரிழிவு நோய் இருந்தபோதிலும் 90 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துவரும் 20-க்கும் மேற்பட்ட அசாதாரணமான சிறப்புக்குரியவர்களை அங்கீகரித்து கௌரவிப்பதற்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்த விருது வழங்கு நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்கவர்களில் நீரிழிவு நோயுடன் சமச்சீரான வாழ்க்கைமுறை மூலம் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை 90 வயதுக்கும் கூடுதலாக நடத்தி வருபவர்களில் உயர்கல்விக்கான தமிழ்நாடு மாநில கவுன்சில் முன்னாள் துணைத்தலைவர் பேராசிரியர் டாக்டர். S.V. சிட்டிபாபு மற்றும் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. P. சபாநாயகம் ஆகியோரும் உள்ளடங்குவர்.

இந்தியாவின் முதியோர் மக்கள்தொகை நிலையாக பெருகிவரும் நிலையில், 90 வயதுக்கு மேற்பட்ட நிலையிலும், நீரிழிவு நிலை இருக்கின்ற போதிலும் சமச்சீரான உணவு, ஒழுங்குமுறை தவறாத உடற்பயிற்சி, உடற்பரிசோதனை மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் மருந்து எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற உண்மையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறுவதற்கு இந்த விருது வழங்கு நிகழ்ச்சி வகை செய்துள்ளது. ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்த பிறகு வாழ்க்கையை எதிர்கொள்ளும் சவால்மிக்க மனநிலைகள் தவிர இவர்கள் எடுத்துக்கூறிய வாழ்க்கை அனுபவங்களும் மற்றும் நிகழ்வுகளும், ஒருவரின் வாழ்வுகாலத்தை நீரிழிவு நோய் குறைத்துவிடும் என்று யாவரும் சொல்வதை பொருட்படுத்தாமல் வாழ்க்கையில் வெற்றிகாண்பதற்கு நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது.

இந்தியாவில் நீரிழிவு நோய் சிகிச்சையில் முதன்மையான மையமான டாக்டர். மோகன்ஸ் டயாபட்டிஸ் ஸ்பெஷாலிட்டிஸ் சென்டர் தலைவர் டாக்டர். V. மோகன் கூறுகையில், “இது போன்றவர்கள் நீரிழிவு நோயுடன் எந்த நோய் சிக்கல்களும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை நடத்துவதற்கு டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு நோய் சிறப்பு சிகிச்சை மையத்தில் (DMDSC) நாங்கள்  உதவி வருகிறோம் என்பதை நினைவுகூர்வது எங்களுக்கு முழு திருப்தியளிக்கிறது,” என்றார். அவர் மேலும் கூறுகையில், “நீரிழிவு நோயுடன் உள்ள 90 வயதுக்கு மேற்பட்டவர்களின் இதுபோன்ற உத்வேகம் தரும் அனுபவங்களை கேட்கும் தருணம் ஒருபோதும் கிடைத்ததில்லை என்பதால், இந்த அசாதாரண சிறப்புக்குரியவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது, உலகளவில் பலருக்கு உத்வேகமாக இருப்பார்கள் என்பது எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தருகிறது. இது, நீரிழிவு நோயுள்ள அனைத்து வயதுப்பிரிவினர் மட்டுமில்லாமல் அனைத்து பகுதியைச் சார்ந்தவர்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கும் என்பது நிச்சயம்,” என்றார்.

DMDSC மேலாண்மை இயக்குநர் டாக்டர். அஞ்சனா கூறுகையில், “நீரிழிவு நோயுள்ள ஒவ்வோராண்டும் ஒருவரின் உயிரியியல் வயதில் ஓராண்டை கூட்டுகிறது என்று பாரம்பரியமாக கற்பிக்கப்படுகிறது. ஒருவர் (நிகழ்ந்த காலக்கிரமப்படி 70 ஆண்டு வயதுள்ள ஒரு நபருக்கு 20 ஆண்டுகள் நீரிழிவு நோயிருக்குமானால், அவருடைய உயிரியியல் வயது 90 ஆண்டு (அதாவது 70 ஆண்டுடன் 20 ஆண்டு சேர்த்து) ஆகும். அதாவது 70 வயதுள்ள அவரின் தமனிகள் மற்றும் உறுப்புகளின் வயது 90 ஆண்டுகளாகும்,” என்றார்.

டாக்டர் V.  மோகன் கூறுகையில், “இன்று நாம் இந்த கட்டுக்கதையை பொய் என நிரூபித்திருக்கிறோம். இங்கு 95 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர் மற்றும் இதில் சிலருக்கு 55 ஆண்டுகள் நீரிழிவு நோய் இருந்திருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் என்றால்நாம் மரபுசார்ந்த பாரம்பரிய சூத்திரத்தை பயன்படுத்துவோமானால்அவர்களுடைய உயிரியியல் வயது 150 ஆண்டு ஆகும்,” என்றார்.

டாக்டர். V. மோகன் மேலும் கூறுகையில், “நீரிழிவு நோய் உள்ளவர்கள் நீண்டகாலம் வாழ்வதற்கு எளிய மந்திரம்  என்னவென்றால்ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும்உடற்பயிற்சியை தவறாமல் ஒழுங்குமுறையோடு செய்ய வேண்டும்.   ஒவ்வொரு 3-4 மாதமும் நீரிழிவு நோய்க்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் ஒழுங்குமுறையாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் யோகா அல்லது பிராணயாமா மூலம் மனஅழுத்தத்தை குறைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் 100 ஆண்டுகள் வாழ்வது சாத்தியமாகும்,” என்று கூறினார்.

டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் குறித்து : தமிழ்நாட்டின் சென்னையில் தலைமையகத்தைக்கொண்டிருக்கும் டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையமானது (DMDSC), 1991-ம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இந்தியாவின் முன்னணி நீரிழிவு சிகிச்சை வழங்கல் நிறுவனமாகத் திகழும் இது, நீரிழிவு நோயாளிகளுக்கு விரிவான சேவைகளை வழங்கிவருகிறது. இந்தியாவில் 42 நீரிழிவு சிகிச்சை மையங்களையும் மற்றும் கிளினிக்குகளையும் கொண்டு நீரிழிவுக்கு முழுமையான சேவைகளை இது வழங்கிவருகிறது (சென்னையில் 9 சிகிச்சை மையங்கள், வேலூரில் 2, ஹைதராபாத்தில் 7, பெங்களூருவில் 4, கேரளாவில் 2 மற்றும் மைசூர், மங்கலூர், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, பாண்டிச்சேரி, சூணாம்பேட்டை, தஞ்சாவூர், விஜயவாடா, ராஜமுந்திரி, புதுடெல்லி மற்றும் புவனேஸ்வர், லக்னோ, தூத்துக்குடி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் முறையே ஒரு மையம்). இந்த சிகிச்சை மையங்களில் 4,50,000 அதிகமான நிரிழிவு நோயாளிகள், சிகிச்சைக்காக தங்களை பதிவுசெய்துகொண்டுள்ளனர். இம்மையமானது, முழுமையான நீரிழிவு சிகிச்சை, நீரிழிவால் பாதிக்கப்பட்ட கண்களுக்கான சிகிச்சை, நீரிழிவு கால் பராமரிப்பு சேவைகள், நீரிழிவு சார்ந்த இதய சிகிச்சை, நீரிழிவு சார்ந்த வாய்/பற்களுக்கான சிகிச்சை, முன்தடுப்பு பராமரிப்பு, உணவுமுறை ஆலோசனை மற்றும் ஒரு மிக நவீன பரிசோதனையகம் ஆகிய பிரிவுகளில் சிறப்பு கவனமும், நிபுணத்துவமும் கொண்டிருக்கிறது.

 

இங்கு சிகிச்சைக்கான முன்பதிவுகளை www.drmohans.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

You might also like More from author