அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் கைது

அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாகவும், அனுமதியின்றி தங்கியதாக இந்தியர்கள் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, தலைமறைவானவர்களை குறிவைத்து, அமெரிக்க எல்லை ரோந்து பாதுகாப்பு வீரர்கள், கடந்த சில நாட்களாக சோதனையில ஈடுபட்டனர்.

அதில், ஹூஸ்டன் பகுதியில், குடியேற்ற விதிகளை மீறியதாக 45 பேரை போலீசார் கைது செய்தனர்.சில நாட்களுக்கு முன், டெக்சாஸ் பகுதியில், அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 78 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், ஹோண்டுராஸ், எல் சல்வடார், கவுதமாலா, அர்ஜென்டினா, கியூபா, நைஜீரியா, இந்தியா, சிலி மற்றும் துருக்கி நாடுகளை சேர்ந்தவர்கள். எத்தனை இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

You might also like More from author