எல்லையில் இனிப்பு பரிமாறி கொண்ட இந்திய-பாகிஸ்தான் படை வீரர்கள்

இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

இந்நாளில் இந்திய நாட்டினர் அனைவரும் தேசப்பற்றுடனும், மகிழ்ச்சியுடனும் மூவர்ணக்கொடிகளை ஏற்றி தேசியகீதம் பாடி ஒருவருக்கொருவர் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள அட்டாரி–வாகா எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படைவீரர்களும், பாகிஸ்தானிய அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். அவற்றை பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களுடன் கைகளை குலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அதே போல் இந்திய-வங்காளதேச எல்லையான சிலிகுரி பகுதியிலும் வங்காளதேச எல்லை வீரர்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்புகளை வழங்கினர்.

You might also like More from author