ஜப்பானில் 25 ஆண்டுகளில் இல்லாத அசுர புயல்: கோர தாண்டவத்தால் 10 பேர் பலி

ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத கடுமையான புயல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பான் நாட்டின் இஷிகாவாவில் திடீரென புயல் வீசியது. மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால், வீடுகளின் மேற்கூரை நெடுந்தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தலைக்குப்புற கவிழந்தன.

ஒசாகா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கப்பல் ஆட்டம் கண்டது. பின்னர் அந்த கப்பல் சென்று கரைப்பகுதியை தாக்கியதில் பாலம் ஒன்று சேதம் அடைந்தது. பல மீட்டர் உயரத்துக்கு எழுந்த கடல் அலைகள் கரைப்பகுதியில் புகுந்தது.

யலை தொடர்ந்து அங்கு கடுமையான மழை பெய்து வருகிறது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், கடைகள், அலுவலகங்கள் என அனைத்து மூட்பபட்டுள்ளன.

கான்சாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புல்லட் ரயில் உள்ளிட்ட ரயில் சேவையும், படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

You might also like More from author