பா.ம.க.,காடுவெட்டி குரு கவலைக்கிடம்!

பாமகவைச் சேர்ந்த காடுவெட்டி குரு உடல்நல பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று குருவிடம் உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.

மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர். இந்த நிலையில் காடுவெட்டி குரு உடல்நிலை குறித்து தவறான தகவல் பரவியது.

இது குறித்து பாமக தரப்பில் கேட்டபோது, ‘காடுவெட்டி குருவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்’ என்று தெரிவித்தனர்.

You might also like More from author