ஜெயம் ரவியுடன் இணைய இருக்கிறார் காஜல் அகர்வால்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் காஜல் அகர்வால். இந்தித் திரைப்படமான ‘கியூன் ஹோ கயா நா’வில் அறிமுகமானார்.
கடந்த பத்து வருடங்களில் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் காஜல். இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘போகன்’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்க விருப்பதாகக் கூறப்பட்டது.ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாததால் அவருக்குப் பதிலாக ஹன்சிகா நடித்தார். தற்போது புதிய படம் மூலம் ஜெயம் ரவியுடன் இணைய இருக்கிறார் காஜல் அகர்வால்.
ஜெயம் ரவி அடுத்து தனது அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கிறார். தனி ஒருவன் வெளியாகி 3 ஆண்டுகள் முடிவடைவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

You might also like More from author