கூத்துப்பட்டறை நிறுவனர் நா.முத்துசாமி காலமானார்

சினிமா உலகில் நடிகர், நடிகைகள் பலரை உருவாக்கிய கூத்துப்பட்டறையை நிறுவிய நா.முத்துசாமி (82) உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமானார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சை கிராமத்தை சேர்ந்தவர். விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
தெருக்கூத்து மூலம் பிரபலமான இவர் கூத்துப்பட்டறை மூலம் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வந்தார். மேலும் `வாழ்த்துக்கள்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
 முத்துச்சாமி எழுதிய நா.முத்துசாமி கட்டுரைகள் என்ற நூல் 2005-ஆம் ஆண்டில் தமிழக அரசு விருதை வென்றது. முத்துசாமி மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You might also like More from author