உலகின் மிகப்பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு!

largest-known-prime-number-discovered

அமெரிக்காவில் பொறியாளராக பணிபுரிந்து வரும் ஜோனாதன் பேஸ் என்பவர் உலகின் மிகப்பெரிய முதன்மை எண்ணை கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளார்.

ஒன்று மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு எண்ணால் வகுபடாத எண்ணுக்கு முதன்மை எண் அல்லது பகா எண் (பிரைம் நம்பர்) என்று பெயர். சில முதன்மை எண்களாக 2, 3, 5, 7, 11, 13, 17 மற்றும் 19 ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில்  தற்போது மிகப்பெரிய முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதன்மை எண் எம்777232917 ஆகும். மேலும் இதில் 2 கோடியே 32 லட்சத்து 49 ஆயிரத்து நானூற்றி இருபத்தைந்து (2,32,49,42) இலக்கங்கள் உள்ளன.
இது ஒரு சிறப்பு வகை முதன்மை எண்ணாகும். இது மேர்சேன் முதன்மை எண் என அழைக்கப்படுகிறது. இது 50-வது மேர்சேன் முதன்மை எண் ஆகும். இந்த எண்ணை சரிபார்க்க 6 நாட்கள் ஓய்வின்றி கணினிகள் செயல்பட்டிருந்தது.
இந்த முதன்மை எண்ணில் எந்த தவறும் இல்லை என்பதை 4 வெவ்வேறு நிறுவனங்கள் உறுதி செய்தன. ஜிஐஎம்பிஎஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் புதிய முதன்மை எண்களை கண்டுபிடித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நிறுவனம் பரிசுத்தொகை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது

You might also like More from author