தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் நிஜலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும். நிலத்தடி நீரை எடுக்க விதித்த நிபந்தனைகளை நீக்க தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  
பொதுப்பணித்துறை செயலாளர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. நிலத்தடி நீர் எடுக்க அனுமதி அளிக்காததால் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும். கேன் குடிநீர் உற்பதியாளர்கள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தநிலையில், தண்ணீர் லாரி ஸ்டிரைக் நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author