ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு:அ ம மு க மற்றும் பொதுமக்கள் சார்பாக நினைவஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக அ ம மு க மற்றும் பொதுமக்கள்  சார்பாக நினைவஞ்சலி.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2வது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.மதுரை மாவட்டம் முழுவதும் அதிமுக, அ ம முக மற்றும்  பொதுமக்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக மதுரை முனிச் சாலையில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில் தொண்டர்கள், பொதுமக்கள் தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்திலிருந்து காமராஜர் சாலை வழியாக தினமணி திரையரங்கு வரை மவுன ஊர்வலமாக சென்று ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அனுப்பானடியில் உள்ள    எம் ஜி ஆர் திருக்கோயிலில் வட்ட செயலாளர் எம் ஜி ஆர் நாகராஜன் தலைமையில் எம் ஜி ஆர் மாநில இளைஞரணி இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ் உட்பட ஏராளமானோர்  எம் ஜி ஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் இக்கோயிலில் 25 தொண்டர்கள் மொட்டை அடித்து முடிக் காணிக்கை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரைபழங்காநத்தத்தில் அம்மா பேரவை தென் மாவட்ட  நாடக கலைஞர்கள் சார்பாக தலைவர் ரஞ்சித் குமார் தலைமையில் ஜெயலலிதா, எம்ஜிஆர், சிவாஜி, அப்துல் கலாம் வேடமணிந்து ஏராளமான நாடக கலைஞர்கள் கலந்து கொண்டு ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து மதுரை அனுப்பானடியில் 57வது வட்ட அமமுக சார்பாக அனுப்பானடி பாலகுமார் தலைமையில் பிச்சை, முருகன், போஸ், பாலமுருகன் உட்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

You might also like More from author