111 வது  ஜெயந்தி விழா:தமிழக முதல்வர்,துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111 வது  ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அமைச்சர்கள் ஆர் பி உதயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் மற்று கட்சி பிரமுகர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் T. T.v.தினகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் தென் இந்திய பார்வர்டு பிளாக் திருமாறன் ஜீ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்            திமுகவினர் ஸ்டாலின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பாரதிய ஜனதா சார்பில் அமைச்சர் பொண்ராத கிருஷ்ணன் PT.அரச குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர் G.K.மணி மற்றும் திலகபாமா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

You might also like More from author