மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கு

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில் தகவல்
மதுரை   மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் குறித்த நவீன மருத்துவ கருத்தரங்கம்  நடைபெற்றது.தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட பல்வேறு பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புற்று நோய் மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் கலைச்செல்வி
 தலைமை தாங்கினார்.மீனாட்சி  மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை நிபுணர் டாக்டர் முத்துக்குமாரசாமி டாக்டர் ரமேஷ் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக இந்திய புற்றுநோய் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பூர்விஷ்   கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து கருத்தரங்கு நடைபெற்றது குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டர் கிருஷ்ணகுமார் செய்தியாளர்களிடம்  கூறுகையில் பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளில் புற்றுநோயின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது பொதுவாக பெரும்பாலும் 74 வயதுக்குட்பட்ட எட்டு ஆண்களில்  ஒருவருக்கு நோய் கண்டறியப்படுகிறது மேலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குடல் புற்றுநோய் இதன் மூலமே வருகிறது ஆனால் ஆண்களுக்கு 85% புகையிலையினால் மட்டுமே புற்றுநோய் வருகிறது எனவே இது சாதாரண நோய் என்றும் பணக்கார நாடுகளில் தான் வளர்ந்தது என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன ஆனால் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம் பாரபட்சம்  இல்லாமல் அனைத்து வயதினரையும் தாக்கக் கூடிய இந்நோய் திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பரவலாக காணப்படுகிறது பெண்களுக்கு கொழுப்பு உள்ள உணவு பொருட்கள் மூலமாக மரபணு மாற்றத்தினால் விரிவடைகிறது ஆண்களுக்கு முப்பது சதவீத நோய் புகையிலை மற்றும் புகைப் இதனால் வழிகிறது நோயின் தன்மை எத்தகையதாக இருந்தாலும் சிகிச்சையை நம்பிக்கையும் துணிவும் வேண்டுமானால் மேலும் மார்பக புற்றுநோய் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குடல் புற்றுநோய் கேன்சர் சிகிச்சையின் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் மேலும் கேன்சர் நோயை குணப்படுத்தக் கூடிய நவீன கருவிகள் இந்திய பெரிய நகரங்களில் மட்டுமே உள்ளது என்ற நிலை மாறி மதுரை போன்ற ஊர்களிலும் உள்ளது
தரமான சிகிச்சைக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டு, 25 ஆண்டுகளாக இம்மருத்துவமனை செயல்படுகிறது. புற்றுநோய்க்கு அமெரிக்கா முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர். பிரதமர் நிவாரண நிதி, நன்கொடை, கமீலா கேன்சர் நிதியுதவி மையம் மூலம் நிதியுதவி செய்யப்படுகிறது  தற்போது புற்றுநோய் சிகிச்சை மையம் 8 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது,

You might also like More from author