மாநகராட்சி செலவினங்களை மறுதணிக்கை செய்ய ஆட்சியரிடம் மனு

மதுரை மாநகராட்சியில் கடந்த 2016- 2017ம் நிதியாண்டில செய்யபட்ட செலவினங்களில் அதீத செலவினங்களாக உள்ளவைகளை மறுதணிக்கை செய்யுமாறு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மக்கள் விழிப்புனர்வு அறக்கட்டளையின் நிறுவனர் ஹக்கிம் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பில்
மதுரை மாநகராட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ன் பிரிவு 4/1b ன் படி மிக சிறப்பாக தாமாகவே முன்வந்து கடந்த 2014-15, 2015- 16, 2016-17 ஆகிய நிதியாண்டில் வரவு செலவு அறிக்கையினை தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது,
கடந்த 2016-17 ம் நிதியாண்டில் ரூபாய் 308,74, 15, 882 செலவு செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் இந்த வரவு – செலவில் செலவு கணக்கில் பல்வேறு செலவினங்களுக்கு அதீத தொகை செலவு செய்யப்பட்டு உள்ளது. அதில் மாநகரா ட்சியின் ஊழியர்களின் செலவினத்தில் மருத்துவ செலவுக்கான ரூ 31,65, 405 செலவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளக்கு மருந்து வாங்க 2016-17 நிதியாண்டில் மட்டும் ரூ 1,13,38,528 ஆக உள்ளது. இதே 2015 – 16 நிதியாண்டில் ரூ 28, 50,000 மட்டுமே உள்ளது. ஓர் ஆண்டில் 4 மடங்கு உயர்ந்து உள்ளது. இது போன்று பல்வேறு வகையில் அதீத செலவினங்களாக உள்ளவைகளை  மறுதணிக்கை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவிடம் மனு அளிக்கபட்டுள்ளது என்று கூறினார்.

You might also like More from author