பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரி கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

மதுரை அண்ணா நகர் பகுதியில் 20 அம்ச கோரிக்கையை வழியுறுத்தி தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது, மாரியப்பன் கோட்டத் தலைவர், முத்துக்குமரன் மாவட்ட பொருளாளர், பாண்டி கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க தலைவர், மற்றும் சங்க மூத்த நிர்வாகிகள் , உடன் இருந்தனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயபாஸ்கர் ,
பழைய ஒய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்,
உட்பிரிவு பட்டா மாறுதல் உட்பட அனைத்து விதமான பட்டா மாறுதல்களிலும் VAO பரிந்துரையை கட்டாயமாக்குதல் செய்ய வேண்டும்,
கிராம நிருவாக அலுவலரின் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும்,
கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பூதியம் மீண்டும் வழங்க வேண்டும்,
ஒரே உத்தரவில் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும்,
கிராம நிருவாக அலுவலர்களுக்கு கணிணி மற்றும் அடிப்படை இணையதள வசதிகள் செய்து தருதல் வேண்டும், இது போன்று 20 அம்ச கோரிக்கையையும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினார்

You might also like More from author