மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளின் பரிசளிப்பு விழா

மதுரையில் நடைபெற்ற 44வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் அருகில் உள்ள ரைபிள் கிளப்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தென் மண்டல காவல்துறை தலைவர் சண்முகராஜேஸ்வரன் கலந்து கொண்டு துப்பாக்கி சுடும் போட்டிகளில் முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கான பதக்கங்களை வழங்கினார்.
ஜூலை 23 முதல் 29 வரை 7 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து 28 துப்பாக்கி சுடும் கழகங்களை சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
போட்டிகளில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த ரிஷ்வந்த், மிதுனா ஸ்ரீ உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

You might also like More from author