மூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்

சென்னை சென்ட்ரல் முதல் விமானம் நிலையம் வரை இயங்கும் மெட்ரோ ரயில்களில் மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை நேரு பூங்கா – சென்ட்ரல், சின்னமலை-ஏ.ஜி., டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த வழித்தடத்தில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். ஆகிய 4 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சின்னமலை – டி.எம்.எஸ். இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தும் இன்று தொடங்குகியது.

இதன்மூலம் சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு பயணிகள் நேரடியாக சென்று வரலாம். அதேநேரத்தில் சைதாப்பேட்டை மார்கமாக செல்ல விரும்பும் பயணிகள், விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். பின்பு, டி.எம்.எஸ். மார்கமாக செல்லும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டும்

சென்ட்ரல் வரையில் புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதையொட்டி இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் எந்த ரெயில் நிலையத்தில் வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாம். இந்த இலவச பயணம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு செயல்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது

You might also like More from author