நடிகை மியா ஜார்ஜ் தன் தாயுடன் ஸ்கை டைவிங் சாகசம்

பிரபல மலையாள நடிகையான மியா ஜார்ஜ், தமிழில் ‘அமர காவியம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல  வரவேற்பு பெற்றது. இதையடுத்து, விஷ்ணு விஷாலுடன் ‘இன்று நேற்று நாளை’, சசிகுமாருடன் ‘வெற்றிவேல்’, விஜய் ஆண்டனியுடன் ‘எமன்’ படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வரும், மியா ஜார்ஜ், தன்னுடைய தாயின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். ஸ்கை டைவிங் எனப்படும் வானில் பறக்கும் சாகசத்தில் தன் தாயை பறக்க வைத்து மகிழ்ந்திருக்கிறார் மியா ஜார்ஜ்.
மியாவின் அம்மாவுக்கு வானில் பறக்க ஆசை இருந்துள்ளது. இதை நிறைவேற்றுவதற்காக புளோரிடாவில் உள்ள ஸ்கை டைவிங் அமைப்புக்கு அழைத்துசென்று அம்மாவோடு சேர்ந்து தானும் பறந்து இருக்கிறார் மியா ஜார்ஜ்

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com