மீண்டும் தீவிர அரசியலில் அழகிரி? தொண்டர்கள் உற்சாகம்

mk-azhagiri-asks-reporters-to-wait-for-6-months

மீண்டும் தீவிர அரசியலுக்கு எப்போது இறங்குவீர்கள் என்று மு.க.அழகிரியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்றும் 6 மாதங்கள் காத்திருங்கள் என்று அவர் தெரிவித்த கருத்து அவரது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தில் ஏற்படுத்தி உள்ளது.

அழகிரி உட்கட்சி விவகாரம், கட்சியின் தலைமை பொறுப்பு உள்ளிட்ட சில முரண்பாடுகளால் தி.மு.க.வில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்கிறார். மேலும் தனது ஆதரவாளார்கள் தொடார்ந்து மறுக்கப்படுவதும், ஸ்டாலினின் கை கட்சியில் ஓங்கி வருவதும் விரிசலை அதிகப்படுத்தியது.

இந்நிலையில் மு.க.அழகிரி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவத் தொடங்கின. ஆனால் இது தொடா்பாக எந்தவித கருத்தையும் அவர்  வெளிப்படுத்தாமல் இருந்து வந்தார். பின்னார் நீண்ட இடைவெளிக்கு பின்னார் அழகிரி, கலைஞரை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடார்ந்து அவார் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த அழகிரியிடம் நீங்கள் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 3 அல்லது 6 மாத காலம் காத்திருங்கள் என்றார் 

 அழகிரியின் இந்த கருத்தால் அவரது ஆதரவாளார்கள் மத்தியில் உற்சாகம் எழுந்துள்ளது.

You might also like More from author