தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஸ்டாலின் வாழ்த்து

2018-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளை  மத்திய அரசு நேற்று அறிவித்தது.  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு ராஜூவ் கேல் ரத்னா, 8 பேருக்கு துரோணாச்சார்யா, 20 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில்  அர்ஜூனா விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அர்ஜூனா விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் @sathiyantt அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்! ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தன் இலக்காக கொண்டிருக்கும் சத்யன், தொடர்ந்து பல்வேறு சாதனைகள் புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்!என கூறியுள்ளார்.

You might also like More from author