18 M.L.A தகுதிநீக்க வழக்கு -அதிமுக கொறடா கேவியட் மனு தாக்கல்

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 18 பேரின் தகுதிநீக்கத்தை உறுதி செய்தது.

இதனால் 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். மேல்முறையீடு குறித்து 18 பேரிடமும் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக கொறடா ராஜேந்திரன் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

You might also like More from author