மூணாறில் நிலச்சரிவு: 80 பயணிகள் சிக்கி தவிப்பு

கேரளாவில் தென்மேற்குபருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இரு மாதங்களாக கனமழை பெய்து வருவதால், நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மழை தொடர்பான சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

 

இடுக்கி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் அணை நேற்று திறக்கப்பட்டது. 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று (ஆக.,10) நண்பகல் 12 மணியளவின்படி அணைக்கு வினாடிக்கு 521 கன அடி தண்ணீர்வந்து கொண்டுள்ளது. மேலும் 2 மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு பின், அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டன.

தொடர் மழையால் சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள மருத்துவமனை, பக்தர்கள் தங்கும் இடம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின. ஆலுவா சிவன் கோயிலும் மழை நீரில் மூழ்கியுள்ளது.

 

இடுக்கி மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் அதிகபட்ச உஷார்நிலை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு படை வீரர்களும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

இடுக்கி மாவட்டம், மூணாறில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு செல்லும் வழியில், நிலச்சரிவு ஏற்பட்டது. சாலை துண்டிக்கப்பட்டதால், ரிசார்ட்டில் தங்கியுள்ள 20 வெளிநாட்டவர் உள்பட 80 பயணிகள் சிக்கி தவிப்பு பேர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

You might also like More from author