நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒலி மருத்துவமனையில் அனுமதி

நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர் மருத்துவ கவனிப்புக்கு பிறகு உடல்நிலை தேறியது. ஆனால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்ததாலும், இருதயத்தில் நோய்த் தொற்று காரணமாகவும் சமீபகாலமாக அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக கடந்த சில தினங்களாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், நேற்று இரவு பிரதமர் கே.பி.ஒலியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. சளி இருமல் அதிகரித்து மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். இதையடுத்து அவர் உடனடியாக மகராஜ்கஞ்ச் நகரில் உள்ள மன்மோகன் கார்டியோ வாஸ்குலார் மையத்தில் சேர்க்கப்பட்டார். ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

You might also like More from author