பாகிஸ்தான் சுதந்திர தினம்: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்

பாகிஸ்தானின் 72வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு ஒருநாள் முன்னதாக பாகிஸ்தானிற்கு சுதந்திரம் வழங்கினர். அதன்படி அந்நாட்டில் இன்று சுதந்திர கொண்டாட்டங்கள் கலை கட்டியுள்ளன. 

இதற்கான அந்நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டன. நாட்டின் தலைநகரில் 21 குண்டுகள் முழங்கவும், பாகிஸ்தான் மாநிலங்களில் தலைநகரில் 21 குண்டுகள் முழங்கவும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இஸ்லமாபாத்தில் உள்ள ஜின்னா அரங்கில் அந்நாட்டின் குடியரசுத் தலைவர் மம்னூன் ஹூசைன் தேசியக் கொடியை ஏற்றினார். இதற்காக நடைபெற்ற கோலாகல விழாவில் பாகிஸ்தான் தற்காலிக பிரதமர் நசிருக் மல்க் மற்றும் ராணுவ முப்படை தளபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்கள், இந்திய வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். இந்திய வீரர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

You might also like More from author