லேப்டாப்களுக்கு ரூ.20,000 தள்ளுபடி பேட்டிஎம் மால் அறிவிப்பு!!

இந்தியாவில் பேட்டிஎம் மால் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. அமேசான், பிலிப்கார்ட் போலவே இந்த இணையதளமும் இயங்கி வருகிறது. இந்தியாவில் தற்போது 72ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பேட்டிஎம் மால் ஆன்லைன் வர்த்தக இணையதளத்தில் லேப்டாப்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது.

 

பேட்டிஎம் மாலில் வாங்கப்படும் லேப்டாப்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை 8 நாள் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை ஆடர் செய்தால் மட்டுமே இந்த சிறப்பு தள்ளுபடியை பெறமுடியும். ஐசிஐசி வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளில் பொருட்களை ஆடர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5% சதவீதம் தள்ளுபடி பெறலாம்.

1.லேனோவோ லீடுபேடு 320 லேப்டாப்பின் விலை ரூ.26,790. தற்போது ரூ. 4500 குறைக்கப்பட்டு ரூ.22490க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2.டெல்ஸ்ட்ரோ 3578 லேப்டாப்பின் விலை ரூ.39.490 ஆகும். இந்த ஆப்பரின் மூலம் ரூ.6000 தள்ளுபடி செய்யப்பட்டு 33,490க்கு கிடைக்கும்.

3.ஏசர் ஆஸ்பியர் விலை ரூ.21990. இதற்கு தள்ளுபடியாக ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ரூ.25 ஆயிரத்து 990க்கு விற்பனை செய்யப்படும்.

4..ஏசூஸ் விவோபுக் எஸ்406யுஏ- பிஎம்204டி லேப்டாப்பின் விலை ரூ.49,990 ஆகும். இதற்கு ரூ.6 ஆயிரம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆயிரத்து 990க்கு இந்த லேப்டாப்பை பெறலாம்.

5.லேனோவா நோட்புக் ஐபி 330-515 கேபியை ரூ.5 ஆயிரத்து 500 தள்ளுபடி போக ரூ.32 ஆயிரத்து 990க்கு பெற முடியும்.

6.எம்எஸ்ஐ ஜிஎல் 8ஆர்இ-4455ஐஎன் லேப்டாப்பை 1 லட்சத்து 4 ஆயிரத்து 990 ஆகும். தற்போது இதற்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி பெறமுடியும்.

7.எம்எஸ்ஐ ஜிஎல்63 8ஆர்டி-062ஐஎன் ரூ. 79 ஆயிரத்து 990 ஆகும். இதற்கு தற்போது ரூ.15 ஆயிரம் தள்ளுபடியாக வழங்கப்பட்டு, 94 ஆயிரத்து 990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

8.ஆப்பிள் மேக்புக் ஏர் எம்கியுடி42ஹெச்/ஏ ரூ.69,150 ஆகும். விலையில் 11 ஆயிரம் குறைப்பட்டு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும். மேலும் பல்வேறு நிறுவங்களின் லேப்டாப்பளுக்கும் விலை குறைப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

You might also like More from author