பெட்ரோல், டீசல் இமாலய விலைக்க்கு தொடர்ந்து உயர வாய்ப்பு!

சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டு இருக்கிறது. 17 பைசா வரை பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. ஹைக், ஹைக், ஹைக்.. பெட்ரோல், டீசல் விலையில் இதுமட்டும்தான் கடந்த சில நாட்களாக நடந்து கொண்டு உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்றபடி பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே செல்கிறது.

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேகமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. தினமும் பைசா கணக்கில் பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது. கடந்த மாதம் ஒரே நாளில் 4 ரூபாய் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இன்று சென்னையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்தது. தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.41 காசுகளாகும். டீசல் விலை 42 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.98 காசுகளாகும். மும்பையில் பெட்ரோல் விலை 86 ரூபாய்க்கு விற்கிறது. அங்கு விரைவில் ரூ.90 ஆக வாய்ப்பு உள்ளது. இது மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like More from author