ஊழலுக்கும், கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது – பிரதமர் மோடி

ஊழலையும் கருப்பு பணம் முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

டெல்லி:

நாட்டின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் கருப்பு பணம் பதுக்குவோருக்கும் மன்னிப்பே கிடையாது. அவர்களை தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஊழலையும், கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம்.

ஏழைகளின் குரல் டெல்லி வீதிகளில் இப்போது ‘பவர் புரோக்கர்கள்’ குரல் ஓய்ந்துவிட்டது. பவர் புரோக்கர்களுக்கு பதில் ஏழைகளின் குரல்தான் இப்போது அரசால் கேட்கப்படுகிறது.

நலத்திட்ட உதவிகளுக்கான பணம் போலியான கரங்களுக்கு சென்றது நிறுத்தப்பட்டுள்ளது. உண்மையான பலனாளிகளுக்குதான் இப்போது பணம் சென்று சேருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களின் உரிமையை காப்பதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்.

முறைகேடாக சென்று கொண்டிருந்த ரூ.90,000 கோடி பணத்தை தடுத்து நிறுத்தியுள்ளோம். நியாயமாக வரி செலுத்துவோரால்தான் இந்த நாடு வளர்ந்து வருகிறது. ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த வரி பணம் பயனாகிறது. பலாத்கார மனநிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

You might also like More from author