ருசியான பொட்டுக்கடலை சட்னி !!!

எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் பொட்டுக்கடலை கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் குழந்தைகள் இச்சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு பொட்டுக்கடலை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா…

தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை – 1/2 கப் , தேங்காய் துருவல் – 1 1/2 கப் , சின்ன வெங்காயம் – 4 , பச்சை மிளகாய் – 2 அல்லது 3 , இஞ்சி – சிறிய துண்டு , உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு :

எண்ணெய் – ஒரு தேக்கரண்டி , கடுகு – ஒரு தேக்கரண்டி , சீரகம் – 1/2 தேக்கரண்டி , உளுத்தம் பருப்பு – ½  தேக்கரண்டி , கறிவேப்பில்லை – 6

செய்முறை :

சின்ன வெங்காயம் தோல் உரித்து பொடியாக நறுக்கவும். மிக்ஸியில் பொட்டுக்கடலை, தேங்காய், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன் நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்தால் ,  இதோ சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.

You might also like More from author