அப்துல்கலாம் மணிமண்டபம் சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

president-ramnath-kovind

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் இன்றும், நாளையும் சுற்றுப் பயணம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று காலை 10.15 மணிக்கு மதுரை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வந்தடைந்தார்.

அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றார்.
கோவில் வாசலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் இருந்து கலசங்களில் சேகரித்த புனித நீர் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி சுவாமி மற்றும் அம்மன் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.
பின்னர் பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபம் சென்றார். அங்கு கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அப்துல்கலாமின் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.

You might also like More from author