இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அதன்பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று மாலை முதல் பலத்த காற்று வீசும்.

எனவே அந்தமான் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இதேபோல் ஆந்திரா மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு 19, 20, 21 ஆகிய தேதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

அடுத்து இரு தினங்களுக்கு  வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் சிலமுறை மழை பெய்யலாம்.

You might also like More from author