தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்

Rainfall in Tamil Nadu -

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளளது.
 

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில், கர்நாடக பகுதியை ஓட்டிய வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனுடன் தொடர்புடைய மேற்கு திசை காற்றும், வங்க கடல் பகுதியில் வீசுகின்ற கிழக்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி தென் இந்திய பகுதியில் நிலவுகிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவாகவும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலம் மழை பெய்துள்ளது. அதிகமாக, திருப்பத்தூரில் 8 செ.மீ., ஓமலூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like More from author