ரூ.50,000 கோடி டிவிடெண்ட்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2017-18ஆம் நிதி ஆண்டுக்கான  டிவிடெண்ட்தொகையாக ரூ.50,000 கோடியை மத்திய அரசுக்கு அளிப்பதாக ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ளது. 

ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய பொது பட்ஜெட்டைப் பொருத்து, ஜூன் 30, 2018ல் நிறைவடைந்த நிதி ஆண்டுக்கான டிவிடெண்ட் தொகையாக ரூ.50,000 கோடியை மத்திய அரசிடம் வழங்க முடிவுசெய்யப்பட்டது.

கடந்த 2016-17ஆம் ஆண்டில் ரூ.30,659 கோடி (63%) மட்டுமே டிவிடெண்ட் தொகையாக மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் பணமதிப்பு நீக்கம் காரணமாக புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க வேண்டியிருந்ததால், குறைவான தொகை வழங்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியது.

மார்ச் மாதம் அரசின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு ரூ.10,000 கோடியை இடைக்கால டிவிடெண்ட் தொகையாக வழங்கியுள்ளது.

You might also like More from author