குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் நாட்டுக்கு நலன் பிரதமருக்கு கனிமொழி கடிதம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தூத்துக்குடிமாவட்ட குலசேகரபட்டினத்திற்கும் விண்ணியல் ஆய்விற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமத்திய ரேகை அருகேயுள்ள குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால், பெரும் செலவு மிச்சமாகும், பலன் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கோரி, அப்பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு, திமுக எம்.பி. கனிமொழி இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து, 2013ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நான் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளேன். பூமத்திய ரேகை அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் பெரும் பயன் கிடைக்கும். இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.

You might also like More from author