ரூ.400 கோடி வசூலித்து 2.0 படைத்த புதிய சாதனை

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்க, ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் திரையரங்குகில் ஓடிக் கொண்டிருக்கும் 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வசூலில் 2.0 புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த வியாழனன்று சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிய 2.0 முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் ரூ.120 கோடியை வசூல் செய்திருந்தது. 3டி தொழில்நுட்பம், 4டி ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த அனைவரும் இது ஒரு புது அனுபவம் என்று பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் படம் வெளியாகிய 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படத்தின் வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அங்கும் படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author