இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு டாலருக்கு நிகரான மதிப்பு 72.91 ஆனது

சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 72.74 என்ற அளவில் சரிந்தது.

அதன்பின்னர் சற்று ஏற்றம் பெற்று நேற்றைய வர்த்தக முடிவில் 72.69 என்ற நிலையில் இருந்தது.
இந்நிலையில், ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் மீண்டும் சரியத் தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி 22 காசுகள் சரிந்து 72.91 என்ற நிலையை எட்டியது. இதன்மூலம் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை நேற்றைய வர்த்தகத்தின்போது 2 சதவீதம் அதிகரித்த நிலையில், இன்று 0.35 சதவீதம் குறைந்தது. அதேசமயம் இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 133.29 புள்ளிகள் உயர்ந்து, 37546.42 புள்ளிகளாக இருந்தது.

You might also like More from author