தூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின் டிரெய்லர் தள்ளிவைக்கப்பட்டது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ’சாமி 2’ படத்தின் டிரெய்லர் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2003ம் ஆண்டில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான படம் சாமி. மெகா ஹிட் வெற்றியடைந்த இந்த படத்தின் 2ம் பாகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு விரைவில் வெளிவரவுள்ளது.

மீண்டும் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள சாமி 2 படத்தில் பிரபு, பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், உமா ரியாஸ் கான், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

’சாமி- 2’ படத்தின் டிரெய்லர் தள்ளிவைக்கப்பட்டது

 தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீடு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சாமி 2 படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலனிற்காக இறைவனை வேண்டுவோம்.

இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை என்பதால் ‘சாமி 2’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டை நடிகர் விக்ரம் ரசிகர்கள் மற்றும் தமிழ் திரைப்பட ஆர்வலர்களின் அனுமதியுடன் தள்ளிவைக்கிறோம் என்று தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நாளை நடைபெறவிருந்த விஜய் திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தற்போது ’சாமி- 2’ படத்தின் டிரெய்லர் வெளியீடும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

You might also like More from author