கணவருக்கு எதிராக களமிறங்கும் சமந்தா!!

தமிழகத்தை சேர்ந்த நடிகை சமந்தா, தெலுங்கு சினிமா ஹீரோவான நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டனர்

சினிமா உலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தாலும், தொழில் என்று வந்துவிட்டால் இருவருக்கும் போட்டா போட்டி தான். அந்த வகையில் சமந்தா நடித்துள்ள 2 படங்களும், தெலுங்கில் நாக சைத்தன்யா நடித்துள்ள ஒரு படமும் விநாயகர் சதுர்த்தி நாளில் வெளிவரவுள்ளன.

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’சீமராஜா’ படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அதேபோல தெலுங்கு மற்றும் தமிழில் பை-லிங்குவலாக தயாராகியுள்ள யூ-டர்ன் படத்திலும் சமந்தா தான் நாயகி.

கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘யுத்தம் சரணம்’ படத்துக்கு பிறகு தெலுங்கு நடிகரும், சமந்தாவின் கணவருமான நாகசைதன்யாவுக்கு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், நாகசைதன்யா நடித்துள்ள ’சைலஜா ரெட்டி அல்லுடு’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்.13ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பின்னர் வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சமந்தா தற்போது தனது கணவருடன் பாக்ஸ் ஆபீஸில் போட்டியிடவுள்ளார். சமந்தா, நாகசைதன்யா திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் அவர்களது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

You might also like More from author