ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடு – செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கேரளாவுக்கு பள்ளிக் கல்வி துறை சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும். தனியார் பள்ளியுடன் இணைந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
தற்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 4 கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கேரளா கோரும் அத்யாவசிய பொருட்களை அனுப்ப அரசு தயாராக உள்ளது’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்

You might also like More from author